வாழ்வதற்கு சொர்க்கமாக திகழும் 10 அமைதியான நாடுகள் | Top 10 most peaceful countries 🎥 Hurghada City | Channify

Add More Videos To your Channel

உலகில் முதல் 10 மிக அமைதியான நாடுகள் மனிதர்களாகிய நம் அனைவரும் ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான தேசத்தில் வாழ விரும்புகிறோம். அப்படி நம்முடைய உலகில் பல நாடுகள் இருக்கிறது. அமைதியான தேசம் என்பது ஒரு நாடு அண்டை நாடுகளுடன் உறவு, போர் இல்லாமை,அமைதி, வன்முறை, குற்றங்கள் இல்லாமலிருத்தல், ஆரோக்யமான கல்வி,மருத்துவம் போன்றவற்றை கணக்கில் எடுத்து கொண்டு இதை கணக்கிடுகிறார்கள். இதை கணக்கிட ஜி.பி.ஐ ஸ்கோர் Global Peace Index என்னும் கணக்கீடை பயன்படுத்துகிறார்கள் அப்படி நம்முடைய உலகில் மிகவும் அமைதியான 10 நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம் 10. ஜப்பான் ஜி.பி.ஐ ஸ்கோர் 1.408 தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஜப்பான் சமுதாயத்தில் சமாதானமாக இருப்பதற்கு காரணம் . வன்முறை குற்றம் மற்றும் கொலை ஆகியவற்றின் வீதம் நாட்டில் மிகக் குறைவு. ஜப்பானுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்பு படை மட்டுமே உள்ளது மற்றும் எந்த தொழில்முறை இராணுவ சக்தியும் இல்லை. ஜப்பான் அண்டை நாடுகளுடன் ஒரு நல்ல உறவை வைத்திருக்கிறது. 9. சுவிட்சர்லாந்து, ஜிபிஐ ஸ்கோர்: 1.373 சுவிஸ் நகரங்களில் குறைந்த குறை விகிதம் மற்றும் உயர்தர உணவு போன்றவை சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகும். சுவிச்சர்லாந்து மிகவும் உச்சநிலை கல்வி மற்றும் சுகாதார அமைப்பை கொண்டுள்ளது . சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய அமைப்பு மக்களுடைய திறமையை மேம்படுத்த உதவுகிறது. 8. கனடா, ஜிபிஐ ஸ்கோர்: 1.371 கனடா அரசாங்கம் குடிமக்களின் பாதுகாப்பை தேசத்தின் ஒரு நல்ல முக்கிய அம்சமாகக் கருதுகிறது. நாட்டில் மிகக் குறைந்த கொலை மற்றும் குற்ற விகிதம் உள்ளது. OECD அறிக்கை (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) அறிக்கையின்படி கனடாவின் வாழ்க்கைத் திருப்தியளிக்கும் மதிப்பீடு 10 ல் 7.6 ஆகும். 7. ஸ்லோவேனியா, ஜிபிஐ ஸ்கோர்: 1.364 அமைதியான நிலப்பரப்பில் மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு அழகிய நாடு. குற்ற விகிதம் இங்கு மிகவும் குறைவு . மன அமைதி இல்லாதவர்களும் ஸ்லோவேனியாவில் ஒரு அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க முடியும். சுற்றுலா பயணிகளிடம் ஸ்லோவேனியா மிகவும் நட்பாக இருப்பதால் இங்கு சுற்றுலா செல்வதற்கு எந்த கவலையும் இல்லை 6. செக் குடியரசு, ஜிபிஐ ஸ்கோர்: 1.360 செக் குடியரசானது ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறிய நிலப்பகுதி . செக் குடியரசில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செக் குடியரசின் அழகிய தலைநகரான பிராகுவே ஐரோப்பாவில் மிகவும் அதிக அளவு பார்க்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். 5.டென்மார்க், ஜிபிஐ ஸ்கோர்: 1.337 டென்மார்க் உலகில் மிகவும் குறைந்த அளவிலான குற்றங்களே கொண்ட மிகவும் மகிழ்ச்சியான நாடு. உயர் கல்வியறிவு விகிதம், மேம்பட்ட சுகாதார அமைப்புகள், உயர்தர வாழ்க்கை ஆகியவை வாழ டென்மார்க் ஒரு சிறந்த நாடு. 4. ஆஸ்திரியா, ஜிபிஐ ஸ்கோர்: 1.265 மிகவும் சந்தோஷமாக வாழும் நாடுகளில் இந்த ஐரோப்பிய நாடு ஒன்றாகும், ஏனென்றால் இங்கு மிக மிகக் குறைவான குற்றங்கள் மற்றும் கொலை விகிதங்கள் உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான சட்டங்கள் மிக கடுமையாக இங்கு பின்பற்றப்படுகிறது. 3. போர்த்துக்கல், ஜிபிஐ ஸ்கோர்: 1.258 போர்த்துக்கல் உலகிலேயே மூன்றாவது மிக அமைதியான நாடாகும். இங்கு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழலாம் நாட்டின் அமைதியான சூழலைக் காத்துக்கொள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். போர்த்துக்கல்லில் உள்ள கொலைகாரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவை தவிர, செலவு குறைந்த வாழ்க்கை , வெளிப்படையான வரி விதிப்புகள் , காலநிலை மற்றும் நண்பர்களாக பழகும் மக்கள் போன்றவை போர்த்துகீசியம் வாழ்வதற்கு ஒரு மிக சிறந்த இடங்களில் ஒன்றாகும் 2. நியூசிலாந்து, ஜிபிஐ ஸ்கோர்: 1.241 நியூசிலாந்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்த சமூகம் ,குறைந்த சிறைவாசம் அண்டை நாடுகளுடன் நட்பு உறவு ஆகியவை உள்ளன. நாட்டில் வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பு மற்றும் அதிகமான போலீஸ் படைகளும் உள்ளன. 1. ஐஸ்லாந்து, ஜிபிஐ ஸ்கோர்: 1.111 உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் ஐஸ்லாந்து வாழ மிகவும் அமைதியான நாடு. நாட்டில் உயர் மட்ட ஜனநாயகம், பாலின சமத்துவம் மற்றும் குறைந்த சிறைவாசம். நாட்டில் எழுத்தறிவு விகிதம் 99% மற்றும் கல்விக்கான கட்டணம் இல்லை. ஐஸ்லாந்தியர்கள் உலகில் நன்கு அறியப்பட்ட மக்களில் ஒருவராக உள்ளனர். அவர்கள் கல்வியறிவில் சிறந்தவர்களாகவும் புத்தகங்கள் வெளியிடுவதில் முதலிடமும் வகிக்கிறார்கள்.

More from Channel Hurghada City...